காலத்தைக் கொண்டாடுங்கள்
ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தார். ஒருநாள் காலையில் அவரது வங்கி மேலாளரிடமிருந்து ஒரு போன் வந்தது. “சார் உங்க கணக்கில யாரோ ஒருவர் 86,400 ரூபாய் டெபாஸிட் போட்டிருக்கிறார். என்ன பண்ணலாம் என்றார். அவர் யார் என்று தெரியுமா?’என்று கேட்டால் தெரியாது’ என்றார் வங்கி மேலாளர். ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? 86,400 ரூபாய். சும்மாவா? தலைகால் புரியவில்லை மனிதருக்கு. இரவு மறுபடியும் தொலைபேசி அலறுகிறது. “சார் அந்த 86,400 ரூபாயை யாரோ எடுத்துட்டாங்க () சார்” என்றார் வங்கி மேலாளர். “அதெப்படி முடியும்” என்று இவர் அலற பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துவிட்டது. 86,400 டெபாஸிட் செய்தபோது யார் செய்தது என கவலைப்படாதவர் பணம் போனதும் கவலையோடு அலறுகிறார். நாள்தோறும் பெயர் தெரியாத ஒருவர் நம் கணக்கில் 86,400 டெபாஸிட் செய்து இரவே அதை எடுக்கவும் செய்தால் வருத்தம் வராதா? என்ன அந்த 86,400 ரூபாய்…? ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரம். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள். அப்படியானால் 86,400ரூபாய். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திக் கொள்ள 86,400 விநாடிகளைக் கடவுள் நமக்காக டெ...