Posts

குரங்குகள்

ஒரு அறையில் 6 குரங்குகளை வைத்து பூட்டினர் விலங்கியல் விஞ்ஞானிகள்.🐵🐵🐵 🐵🐵🐵 அந்த அறையின் சீலிங்கில் (ceiling) பழபழவென்று ப்ளாஸ்டிக் வாழைப்பழங்கள் 🍌 தொங்க விடப்பட்டிருந்தன. அதனை அடையவேண்டும் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறினால் மட்டுமே முடியும்...சும்மா இருக்குமா குரங்குகள்? ஏணியில் ஏறி அந்த வாழைப்பழங்களை அடைய முயன்றன.எந்த குரங்காவது 🐵 அந்த ஏணியில் ஏறினால், ஐஸ் தண்ணீரை 🚿 பாய்ச்சியடித்தனர் அந்த விஞ்ஞானிகள்... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன.குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன. மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன. மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன. இப்படியே சில நாட்கள் சென்றன. குரங்குகளுக்கு வாழைப்பழத்தைத் தவிர்த்து மற்ற உணவுகள் 🥘🍝 குறிப்பிட்ட நேரத்தில் ⏰ வழங்கப்பட்டன என்பது தனி. மீண்டும் ஒரு குரங்கு 🐵 ஏறியது... ஜஸ் நீருக்கு 🚿 பயந்த

சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் புத்திசாலித்தனமானது!

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். - மதத்தலைவர் - வழக்கறிஞர் - இயற்பியலாளர் முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார். அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது. 'நீதி! நீதி! நீதியே வெல்லும்' என்றார். மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார். அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொ

Don’t fall for Illusion - sweet words ...

விஷ வலையில் விழாதீர்கள்... ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. "மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்." அந்த ஈயும் தாயின் அறிவுரையைக் கேட்டு பளபளப்பான ஒட்டும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது. ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சி னை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாய் அனாவசியமாக பயப்பட்டதாகத் தோன்றியது. அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த ஈ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெள்ள அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று வந்தது. பிரச்சினை எதுவுமில்லை. சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடியது. மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை. அந்தக் காகிதத்தில் அப்படி

Always Be Yourself And Live Happily

😃முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன் 😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள் ☺கோபங் கொண்டேன் ☺" சிடுமூஞ்சி" என்றார்கள். 👨அதிகம் பேசாமலிருந்தேன், 👨" ஊமையன்" என்றார்கள். ❤சளசளவென்று பேசினேன்...!! ❤" ஓட்டவாய் " என்றார்கள். 💙புதிய தகவல்களை பரிமாறினேன் 💙" கருத்து கந்தசாமி " என்றார்கள். 💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன், 💚" ஜால்ரா " என்றார்கள். 💖எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!! 💖முந்திரிக்கொட்டை என்றார்கள். 💛அவர்களைப் பின் தொடர்ந்தேன், 💛" நடிப்பு" என்றார்கள். 🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁 🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள். 🌻வணங்குவதை நிறுத்தினேன், 🌻"தலைக்கனம்" என்றார்கள். 🌺ஆலோசனை வழங்கினேன், 🌺" படிச்ச திமிர்" என்றார்கள். 💓சுயமாக முடிவெடுத்தேன், 💓" அதிபுத்திசாலி "என்றார்கள். 😥நான் கண்ணீர் விட்டு அழுததால், 😥"வேஷக்காரன்" என்றார்கள். 💕நான் சிரித்த போதெல்லாம், 💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள் 💚எதிர்கேள்வி கேட்டால், 💚வில்லங்கம் என்றார்கள் ❤