Posts

டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை

டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை இந்த இணையம், மொபைல், செயலிகள், டிஜிட்டல் கருவிகள் எல்லாமே எந்நேரமும் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆம். என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விடுத்து இவற்றைப் பார்க்கச் செய்வதே இவற்றின் வேலை. சமீபத்திய நரம்பியல் ஆய்வுகள் இவற்றின் மூலக்காரணங்களை ஆய்ந்து வெளியிட்டுள்ளன. 1. புதுத்தகவல்கள் மூளையில் டோபோமைன் எனும் வேதிப்பொருளை அளிக்கின்றன. இது மனத்திற்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. 2. மேலும் மேலும் மகிழ்ச்சி கிடைக்க அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக புதுத் தகவல்கள் வேண்டும். 3. தொடர்ந்து புதுத்தகவல்கள் அளிக்கும் டிஜிட்டல் கருவிகள் மேலும் மேலும் டோபோமைனைது தூண்டி நம்மை ஒரு போதைக்கு அடிமையாக்கி விடுகின்றன. ஒவ்வொரு புது மின்னஞ்சலும், புது ட்வீட், புது முகநூல் செய்தியும் கொஞ்சம் டோபோமைன் தருகின்றன. உற்சாகமாக உணர்கிறோம். விரைவில் இது பழகி விடுகிறது. அதிக மகிழ்ச்சிக்கு அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக செய்திகள் வேண்டும். நிமிடத்துக்கு ஒரு முறை மின்னஞ்சல், டோபோமைன், டுவிட்டர், டோபோமைன், முகநூல், டோபோமைன். இது ஒ

கல்வியின் பெயரில் கறார் மாபியா வியாபாரம்!

பெற்றோர்களை மனநோயாளியாக்கி மாணவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் கோழிப்பண்ணை 10 +2 டுட்டோரியல் நிறுவனங்கள் தற்போது அரசியல்வாதிகளுக்கு பணம் சப்ளை செய்யும் புரோக்கர்கள் கல்வியின் பெயரில் கறார் மாபியா வியாபாரம்! எப்போது திருந்துவார்கள் இந்த ஆட்டு மந்தை பெற்றோர்கள் இது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த அளவு தனியார் பெருமுதலாளிகளின் கல்வி வியாபாரத்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது... பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே! இத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து ப்ளஸ் டூ / பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முதலில் வாழ்த்துகள்... ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை - வேலூர் மாவட்டங்கள்தான்... தென் தமிழகத்தில் எப்போதும்போல திருநெல்வேலி! வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்! ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ்

குழந்தைகளைத் திட்டுங்கள்

குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள் அடங்கிய மிக நீண்ட... வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று, வைரலாகி வருகிறது. இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.  🌼ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள். தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். 🌼பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக்கொள்வார்கள்;  🌼அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள். அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை... இப்படிச் செல்கிறது அந்த வாட்ஸ்அப் மெசேஜ் 'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம் ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வ

மனிதர்களோடு நல்லுறவில் இருக்க

Image

Akshaya Tritiya

Image

இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு

Image
இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு. வளர்ந்த பிறகு குழி தோண்டி அப்படியே புதைச்சிடலாம்! பிளாஸ்டிக் இல்லாமல் யோசிப்போம்! வேர்கள் வெளிவர சிறிய துளைகள் இட்டு மரக்கன்றுகள் வளர்ந்த பிறகு அப்படியே நட்டுவிடலாம். பலா(Atrocarpus heterophyllus) மழைக்கவர்ச்சிக்காக மகிழம்(Mimusops elengi) தலைவலி போக்கும் காற்றுக்காக.. துருக்க வேம்பு(Melia azadirachta) மருத்துவ குணத்திற்காக..

Plan following trees around our homes

Image
ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். - நம்மாழ்வார்.