5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.12,50,000 அருமையான லாபம் கொடுக்கும் அடர்நடவு கொய்யா!
வெளிநாட்டு வேலை... லட்சங்களில் வருமானம்... ஆனால், அவை அனைத்தையும் உதறிவிட்டு பலரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில், சுந்தர்ராஜ - சாந்தி தம்பதியர் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, தற்போது முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் இறங்கி அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைத் அடுத்துள்ள, ரெகுநாதபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது காடம்பட்டி. அங்குதான் இருக்கிறது இவர்களுடைய கொய்யாத் தோட்டம். 5 ஏக்கரில் கொய்யா நடவு செய்து அதில் நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு காலை வேளையில், கொய்யா அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சாந்தியைச் சந்தித்தோம். “நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சேலம். ‘இன்ஜினீயரிங்’ முடிச்சிட்டு ‘எம்.பி.ஏ’ பண்ணுனேன். அதற்கப்புறம் ஒரு ‘சாஃப்ட்வேர் கம்பெனி’யில வேலைக்குப் போயிட்டேன். இடையில, திருமணம் ஆச்சு. கணவருக்கும் நான் வேலை செய்ற ‘ஐ.டி’ துறையிலதான் வேலை. சில வருஷங்கள்ல ரெண்டு பேரும் தனியாக ‘சாஃப்ட்வேர் கம்பெனி’ ஆரம்பிச்சு நடத்துனோம். கிட்டத்தட்ட 30 வருஷம் ரெண்டு பேரும் ‘ஐ.டி பீல்டு’ல இரு...