Posts

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்

 1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்... 2. சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்... 3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிப்போனது... 4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது... 5. சீரழிந்த வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது... 6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினை (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...   7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தை பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்... 8. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்... 9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள்,  பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்... 10. தங்கள் சம்பாத்யத்தில் அனுபவிக்க இயலாததை குறித்த காலத்தில் ...

அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்

 வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது?* *1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.* சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.* அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,* கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.* அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.* சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.* சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.* சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.* 1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.* 2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.* அன்று வாழ்ந...

தெளிவான மனநிலை என்பது!!!

 அதிக மகிழ்ச்சியோ… அதிக துக்கமோ இன்றி சரி எது தவறு எது என்பதை தன்னுடைய உணர்வால்… தன்னுடைய அறிவால் அறிந்து தன்னுடைய உணர்ச்சிகளை ஓரம் கட்டி பிடித்தவர் பிடிக்காதவர் என்ற பாரபட்சம் இன்றி நடுநிலையில் எடுக்கும் மனநிலை.

வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க​ பெண்களுக்கான​ தொழில் | House Wife Work From Home Business Ideas Tamil

 பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள்து குழந்தைகள் மற்றும் தங்கள்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் மேலும் குடும்ப​ சூழ்நிலைக்காரணமாக​ வேலைக்கு செல்ல முடியாத​ சூழ்நிலை பெண்களுக்கு ஏற்படும்.​ குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பெரும்பாலான​ பெண்களுக்கு வேலைக்கு சென்று பணம் சம்பாரிக்க​ வேண்டும் என்ற​ ஆர்வம் இருக்கும். இது மாதிரி வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாரிக்க​ விரும்பும் இல்லதரசிகளுக்கான​ பல தொழில்கள் இருக்கு அவற்றில் சில​ எளிமையான​ முறையில் உங்க​ வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களை பார்க்கலாம். 1.Work From Home Virtual Assistant Job வேலையின் விவரங்கள் Virtual Assistant) விர்சுவல் அசிஸ்ட்டென்ட் வேலை என்பது அதிக​ நிறுவனத்தில் - போன் கால் கஸ்டமர் சர்விஸ், போன் அட்டன் பன்னுவது, அப்பாய்மெண்ட் பிக்ஸ் பன்றது, கஸ்டமர் பீட் பேக் கால் அட்டன் பன்றது, இது மாதிரி நரைய​ சேவைகள் இதில் அடங்கும். இந்த​ வேலையை நீங்கள் செய்வதற்க்கு ஒரு ஆண்ட்ராய்ட் முபைல் போன் மற்றும் தேவைப்பட்டால் உங்களிடம் ஒரு மடிக்கனினியாவது இருக்க​ வேண்டும். இதற்க்கான​ கல்வித் தகுதிகள் ...

உழைக்காமல் முன்னேற முடியாது

 அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள், கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் சாமிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள், இவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா…? தயவுசெய்து வெளியே வாருங்கள்.. உழைக்காமல் முன்னேற முடியாது. உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் பேச்சு அளவில் மட்டும் கூறிக் கொண்டு இருப்பார்களே தவிர செயல்பாடு ஒன்றும் இருக்காது. அதற்குக் காரணம் உழைக்கும் நோக்கம் இல்லாதது. நாம் ஒரு செயலை எண்ணுவது பெரிதல்ல. அதை செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். உழைப்பிற்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைத்தால் தான் நிறைவு பெறுகிறது. ஊரிலேயே பெரிய ஆலமரம்.அதற்குக் கீழே ஒரு திண்ணை.அந்தத் திண்ணையிலே வெட்டியாக உட்கார்ந்து இருப்பதே பெரிய வேலையாக ஒருவன் செய்து வந்தான். அவன் வேலை அந்தத் திண்ணையில் உட்கார்ந்து கால் ஆட்டிக் கொண்டே இருப்பது.. வெட்டியாய்ப் பேசிக் கொண்டு இருப்பது. சோறும் அப்படித் தான் கிடைச்சா சாப்பிடுவது என இருந்தான். இ...

வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன!_

 *வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை,* 1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி 2.வரையறுக்கப்பட்ட இலக்கு 3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் 4.சரியான கண்ணோட்டம் 5.தன் மீதான முழு நம்பிக்கை *1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி:* நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்றுக் கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனைச் சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது ‘வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது. *2. வரையறுக்கப்பட்ட இலக்கு:* தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். ‘குறிக்கோள்’ அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம், ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும். *3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:* நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத் தான் குறை ...

சுய அனுபவமே உண்மையானது....

 ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்துகொள்ள முயன்று வந்தார். ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது. இதனால் மனம் வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை. அ...தாவது, அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி, "குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று முடிவு செய்தார். அவருடன் சென்று விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். பேசி முடித்த அந்த புதிய துறவி அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்...