வீட்டில் இருந்தபடியே செய்யலாம் ஆன்லைன் பிசினஸ்!

ரு பக்கம் வேலை, இன்னொரு பக்கம் வீடு, கணவர், குழந்தை என ஈடுகொடுக்க முடியாமல் அந்த ஓட்டத்தில் நைந்துபோகும் பெண்களின் வலி துயரமானது. ஆனால், பெண் சுயதொழில் முனைவோர்களில் பலர், ‘வீட்டையும் பார்த்துக்கிட்டே தொழிலையும் பார்த்துக்க முடியும்’ என்பதால் இதைத் தேர்ந்தெடுத்தேன்’ என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான், ஆன்லைன் பிசினஸ் வெற்றியாளரான சென்னையைச் சேர்ந்த பிரியா பார்த்தசாரதி. வீட்டில் இருந்தபடியே பல ஆண்டுகளாக ஆன்லைனில் ஃபேஷன் ஜுவல்லரி பிசினஸ் செய்துவந்தவர், இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஆன்லைன் கன்சல்டன்ஸி பணியைச் செய்து வருகிறார்.





‘`வீட்டில் இருந்து சின்னதாவோ, பெரிய அளவுலயோ சுயதொழில் செய்றப்போ, நமக்கு நாமதான் முதலாளி. ஒரு நிறுவனத்துல எவ்வளவு உழைச்சாலும் சம்பள விஷயத்துல பெண்கள் எதிர் கொள்ற பாலினப் பாகுபாடு, அளவுக்கு அதிக வேலை, ஸ்ட்ரெஸ், நைட் ஷிஃப்ட், மேனேஜர் திட்டு, டிராஃபிக் டென்ஷன் கள், காலையில் அரக்கப்பரக்கக் கிளம்பி இரவு சோர்ந்துபோய் வீடு திரும்புறது, வீட்டுக்கு வந்த பின்னாடியும் நமக்காகக் காத்திருக்கும் வேலைகள்... இந்தத் துயரங்களில் இருந்தெல்லாம் விடுதலை கொடுக்கிறது சுயதொழில். சொல்லப்போனா, சாஃப்ட்வேர் நிறுவனத் துல வேலைபார்த்து ஒரு கட்டத்துல சுய தொழிலை கையிலெடுத்த பெண்கள், முன்பு வாங்கின சம்பளத்தைவிட பல மடங்கு தங்களோட பிசினஸ்ல லாபம் பார்க்கிறவங்களா வளர்ந்திருக்காங்க” என்கிறார் பிரியா. 




பிரியா தரும் டிப்ஸ்...

``வீட்டில் இருந்தபடியே வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக ஜுவல்ஸ், சாரீஸ், அக்சஸரீஸ் உள்பட பலவற்றையும் நாமே உற்பத்தி செய்து விற்பனை செய்வது ஒரு ரகம். இதில் கூடுமானவரை லாபம் பார்க்கலாம். வேறு ஒருவரின் பொருட்களை வாங்கி, நாம் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வது மற்றொரு ரகம். இதில் லாபம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ், சோஷியல் மீடியாவை கையாளும் பயிற்சிகள், பொருளுக்கு அட்ராக்டிவ்வான டிஸ்க்ரிப்ஷன், பெயர் வைப்பது... இதெல்லாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள். ஆன்லைன் பிசினஸில் பெரும்பாலும் விற்கிறவர், வாங்குகிறவர் முகம் பார்க்காமல்தான் இருப்பார்கள்.
அதனால் கிரெடிட், டெபிட் கார்டு, பேங்க் அக்கவுன்ட் என ஏதேனும் ஒருவகையில் நமக்கு பணம் வந்த பிறகு டெலிவரி கொடுப்பது பெட்டர்!”

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ