படிச்சுக்கிட்டே ஆன்லைன் பிசினஸ்!
ஹாய்! நான் நிவேதா. சென்னை, எஸ்.எஸ்.என் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் பொண்ணு. சொந்த ஊரு தஞ்சாவூர். சென்னையில சில ஆர்ட் கேலரிகளில் எங்க தஞ்சாவூர் பெயின்ட்டிங்ஸ் பிரைஸ் டேக் பார்த்தா... ஸோ காஸ்ட்லி. ஆனா, எங்க ஊருல ஆர்ட்டிஸ்ட்ஸ் அதை கம்மியான விலைக்கு வித்து வாழ்க்கையை ஓட்டுறாங்க. எனக்கு ஒரு ஸ்பார்க். டெக்னாலஜி மூளையை லைட்டா தட்டிவிட்டேன். ‘www.theartcompany.in’னு வெப்சைட் ஆரம்பிச்சு, தஞ்சை ஓவியங்களை எங்க ஊரு ஆர்ட்டிஸ்ட்ஸ்கிட்ட நேரடியா வாங்கி, ஆன்லைன்ல சேல்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு மட்டுமில்ல... ஆர்ட்டிஸ்ட்ஸ், கஸ்டமர்ஸ்னு எல்லா தரப்புக்கும் நியாயமான லாபம். இப்ப நான் படிச்சிக்கிட்டே சம்பாதிக்கிற சமர்த்துப் பொண்ணு!
என் காலேஜ் ஃப்ரெண்ட், தன் அக்காவோட கல்யாணத்துக்காக கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சல் ஆடுற பெயின்ட்டிங்கை ஆர்டர் பண்ணினா. அந்தப் பணத்தை பொக்கிஷமா வெச்சிருக்கேன்!
என் காலேஜ் ஃப்ரெண்ட், தன் அக்காவோட கல்யாணத்துக்காக கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சல் ஆடுற பெயின்ட்டிங்கை ஆர்டர் பண்ணினா. அந்தப் பணத்தை பொக்கிஷமா வெச்சிருக்கேன்!
கஸ்டமர்கள், குறிப்பா மணமக்கள் அவங்களோட போட்டோஸ் அனுப்பி பெயின்ட்டிங்கா வரைஞ்சு வாங்கும் ஆர்டர்கள் நிறைய வருது. அந்த பெயின்ட்டிங்ஸை என் வெப்சைட்டில் அப்லோடு பண்ண, பிசினஸ் இன்னும் ஸ்பீட்அப் ஆயிருச்சு. ரூ.2,000 முதல் ரூ.16,000 வரையிலான ஓவியங்கள் என் வெப்சைட்டில் இருக்கு. பொதுவா, ரூ.5,000... 6,000 மதிப்பினாலான ஓவியங்கள் சீக்கிரமா மூவ் ஆகும். பார்ட் டைமாவே மாசம் ரூ.4,000 சம்பாதிக்கிறேன். இந்தப் பணத்தை தொழில் வளர்ச்சிக்கே முதலீடு செய்றேன்.
சோஷியல் மீடியாதான் எனக்கு மார்க்கெட்டிங் சப்போர்ட். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு எல்லா மீடியம்களிலும் என் வெப்சைட் ஷேர் பண்ணி, பெயின்ட்டிங் கலெக்ஷன்ஸ், அவற்றின் சிறப்பு, விலைனு விவரங்களுடன் மக்களை ரீச் பண்றேன். நியாயமான விலை என்பதால நல்ல வரவேற்பு. பெரிய தொழிலதிபர்களை நேரடியா சந்திச்சும் பெயின்ட்டிங்ஸ் விற்பேன்.
தஞ்சாவூரின் இன்னொரு சிறப்பம்சமான தஞ்சாவூர் தட்டுகளையும் விற்க ஆரம்பிச்சிருக்கேன். செம்பும் பித்தளையும் கலந்து செய்யப்பட்ட இந்தத் தட்டில், வெள்ளியில் கடவுள் அல்லது மயில் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.
தஞ்சாவூர் மட்டுமில்லாம நம் நாட்டின் மற்ற கலைப் பொருட்களையும் என் வெப்சைட்டில் கொண்டு வரணும். ஆந்திர நிர்மல் ஓவியங்கள், மைசூர் ஓவியங்கள், மகாராஷ்டிராவின் வார்லி ஓவியங்கள்... இதையெல்லாம் மக்களுக்கு சரியான விலையில் கொண்டு சேர்க்கணும்; அந்தக் கலைஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தணும்!
Comments
Post a Comment