Posts

Marketing tricks - வியாபார தந்திரம்

Image
தந்திரம் 1: பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் ஒரு முதியவர் அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். இவர் ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழங்களை வாங்க முன்வரவில்லை. இந்த முதியோர் பலக்கூடையயை சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், மீண்டும் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை. மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார். அங்கும் பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான். மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ‘ஆறு பழம் பத்து ரூபாய்’ என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்குப் பழங்களை வாங்கி,

Change Yourself, Not The World!

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அ

Get Service - Change Your Thinking, Change Your Life.

This 4 minute eye-opening video is a great reminder to us all that there's more to the story than we realize.

Nothing can compete with The knowledge gained from poor, confidence

Image
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, .  ஆப்ரஹாம் ... ... . உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் .... . அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், . " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ...... . இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் .  எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் .... . நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... .  தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ... . வேறெதுவும் போட்டியிட முடியாது......... .

Strength and growth come only through continuous effort and struggle

கஜினி 17 முறை தோற்று 18வது முறை வென்றவர். எடிசன் 1000 முறை தோற்றவர் , இந்த உலகில் ஆஸ்கார், நோபல் இரண்டு விருதையும் வாங்கிய, மிக சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவின் படைப்புகள் தொடர்ந்து 9 வருடங்கள், அனைத்து பிரபல பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதே பத்திரிகைகள். அவர் கேட்கும் பணத்தை கொடுக்க தயாராக இருந்தனர். நம்மில் பலரோ, சின்ன, சின்ன தோல்விகளுக்கே நாம் அலுத்து கொள்கிறோம், சலித்து கொள்கிறோம், வெறுத்து கொள்கிறோம்... இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கு.. இது அனைத்து முட்டாள்களும் சொல்லும் வசனம். எடிசன், லிங்கன், பெர்னாட்ஷா ரேஞ்ச்க்கு கூட யோசிக்க வேண்டாம். ஒரு எறும்பு, தேனி, சிலந்தி போன்ற சின்ன, சின்ன உயிரினங்களுக்கு உள்ள விடா முயற்சி, சுறு, சுறுப்பு கூட பல மனிதர்களுக்கு இல்லையே.  முடியும் வரை செய்வது முயற்சி அல்ல. மூச்சு உள்ளவரை செய்வதே முயற்சி.  விடாது முயலுங்கள், வெற்றி நமதே !!!  காலம் இன்னும் இருக்கின்றன நண்பா காலத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை நம் கையில் தான் உள்ளது...

How to survive difficult times in your life

அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.  ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .  ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள

Beware! of Freebie

திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது. இவனுக்கு திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.  யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது.. அப்போது திருடன் நாயிடம், ''ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்'' என்று கேட்டான்..  அதற்கு அந்த நாய் சொல்லியது, ''நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்.. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று''.. யோசிக்க வேண்டிய விஷயம்..