Posts

'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)

Image
  ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான். தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான். அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார். அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர். ;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான். கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

ஹெல்த் பழமொழியும் அதன் பொருளும்

  1. அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம். அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம். 2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன் உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும். 3. இன்று விருந்து நாளை உபவாசம் இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான். 4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய். மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும். 6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை. எருதுக்கு உணவாக அமையும் ப...

எனக்கும் இதே டவுட்

Image
 

Women's lives can be divided into three main stages.( பெண்களின் வாழ்க்கையை முக்கிய மூன்று நிலைகளாக பிரிக்கலாம்)

 பெண்களின் வாழ்க்கையை முக்கிய மூன்று நிலைகளாக பிரிக்கலாம். முதல் நிலை,  #மகள். இந்த நிலையில் அவள் குடும்பத்தினரின் அன்பையும், அரவணைப்பையும் கல்வியையும் பெறுகிறாள்.  இரண்டாம் நிலையில்  #மனைவி, #மருமகள், #இளம்தாய் ஆகிய மூன்று முகங்களை அவள் கொண்டிருக்கிறாள். இந்த காலகட்டத்தில் இன்றைய பெண்கள் நிறைய பொறுப்புகளையும், பொருளாதார சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மூன்றாவது  #முதிர்ந்ததாய் என்ற நிலையை அடைகிறாள். இந்த நிலையில் பெண்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டாலும், சமுதாயத்தின் அரவணைப்புடன் பாதுகாக்கப்படுகிறார்கள். புகுந்த வீட்டில்தான் பெண் அதிக சிரமங்களை சந்திக்கிறாள்.(அங்கு 3பாத்திரங்களாக அவள் செயல்படுகிறாள்.) அங்கு புதிய உறவினர்களான கணவனது சகோதரி, தாய் ஆகியோர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்த மருமகளாகிய அவள் தயக்கம்கொள்கிறாள்.  இதனை புரிந்துகொண்டு வழிநடத்த சில மாமியார் முன்வராததால் உறவில் தடுமாற்றம் ஏற்படும். முதல் கோணல், முற்றிலும் கோணல் என்ற வழக்கிற்கு ஏற்ப இறுதிவரை இந்த உறவு ஒரு நெருடல...

கூட்டு முயற்சி ( TEAM WORK)

Image
  பல நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர். ஆனால்!, மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது... ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது... ஏனெனில்!, கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது, குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும்போது நமக்கு சகிப்புத் தன்மை, மற்றும் பலவித சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்... கோடை காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்க விடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராகப் பறந்தது... அது அடுத்த நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாகப் பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் நகர முதல்வர் (மேயர்). இந்த காற்றாடி பறந்ததற்...

URGENTLY NEEDED... Not BLOOD

 URGENTLY NEEDED... Not BLOOD But,  An ELECTRICIAN, to restore the joyful current between people, who do not speak to each other anymore...  An OPTICIAN, to change the outlook of people...  An ARTIST, to draw a smile on everyone's face...  A CONSTRUCTION WORKER, to build a bridge between neighbors...  A GARDENER, to cultivate good thoughts...  A PLUMBER, to clear the choked and blocked mindsets...  A SCIENTIST to rediscover compassion...  A LANGUAGE TEACHER for better communication with each other...  And Last but not least,  A MATHS TEACHER, for all of us to relearn how to count on each other...  *Spread lots of love, positivity and smiles today.  Tomorrow might be too late*  Have a wonderful day 🌹💕❤️

குளிர் கால நோயின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் இந்த மூலிகைகளை ரெடியா வச்சிக்கோங்க

  குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே கூடவே சேர்ந்து நோய்களின் வரவும் அதிகமாகி விடும். காய்ச்சல், இருமல் மற்றும் ப்ளூ போன்ற ஏராளமான நோய்கள் உங்களுக்கு உண்டாக வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் நம்மளைச் சுற்றி ஏராளமான வைரஸ்களும் மற்றும் பாக்டீரியாக்களும் வலம் வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். ​பருவகாலத் தொற்று பருவகாலத் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இப்படிப்பட்ட தொற்று நோய்களை தடுக்க இயற்கையாகவே சில மூலிகை பொருட்கள் நமக்கு உதவுகிறது. இந்த மூலிகை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற தொல்களை போக்க உதவுகிறது. ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகிறது. அந்த வகையில் குளிர்கால நோய்களில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு சில மூலிகைகளை நாம் அறிவோம். ​குளிர்காலத்தில் உதவும் மூலிகை பொருட்கள் அதிமதுரம் :அதிமதுரம் குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை புண் பிரச்சினைகளை போக்க உதவுகிறது. பியர்-ரிவ்யூவ் ஜர்னலில் வெளியிடப்பட்ட 2015 ஆய்வின்படி, அதிமதுரத்த...