Posts

Face the Fear To Build Your Confidence

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்த...

Fear man changing his activities - Story

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான் . ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான் . சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான் . அப்போதுதான் கீழே கவனித்தான் . கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான் . அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் வேண்டினான். 'கடவுளே , நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் ' என்றான். வேண்டிக் கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்போல உயரம் தெரியவில்லை . இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது . 'பசு இல்லை கடவுளே , நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் ' என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். 'ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே , நான் உனக்கு கோழியை தருகிறேன் ' எ...

Age, knowledge is Unconnected

வயதுக்கும், அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  அப்பா, தன் மகனை அடிக்கடி "நான் சொல்வதைத்தான் நீ கேட்கணும்" என்று கண்டித்துக் கொண்டே இருந்தார்.. 20 வயதான மகன் ஒருநாள் அப்பாவைத் திருப்பிக் கேட்டான், "எதனால் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்? எனக்கென்று சொந்த அறிவு கிடையாதா?" என்று..  அதற்கு அப்பா, "நான் வயதில் பெரியவன், அனுபவம் எனக்கு நிறைய உண்டு, அதனால்தான் சொல்கிறேன் நான் சொல்வதை மட்டும் கேட்கனும்"னு..  மகன் சொன்னான் "அப்பாவுக்கெல்லாம் அறிவும் அனுபமும் அதிகமென்றால், மார்க்கோனியின் அப்பா ரேடியோவைக் கண்டுபிடித்திருக்கணும், தாமஸ் ஆல்வா எடிசனின் அப்பா மின்சாரத்தை கண்டுபிடிச்சிருக்கனுமே? ஏன் செய்யலை " என்றான்...  - அறிஞர் தென்கச்சி சாமிநாதன் அவர்கள்.

Self confident never fail - தன்னம்பிக்கை

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை .  முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு .. இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும் ”  … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் …  மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)  அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது … ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் . அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர் .  மழையே பெய்யாது எனும்போது இவன் ...

கடன் வாங்கிக் குவித்த இளைஞர்கள்... கச்சிதமாக சேமிக்கும் வழிகள்!

இக்கட்டுரையின் வார்த்தைகளை வாழ்நாள் முழுதுமே முறையாகப் பின்பற்றுவதால் ஒருவர் பெறக்கூடிய  முழு பலன்... சொல்லிற்கடங்காது. அனுபவப்பூர்வமான இக்கட்டுரையில் விட்டுப்போயிருக்கும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் இங்கே நான்  குறிப்பிட விரும்புகிறேன். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' உண்மைதான்!  இதை அடைவது எப்படி? கடனற்ற வாழ்வே நிரந்தர இன்பம். காரணம் எதுவாயினும், யாரிடமிருந்தும் எப்போதும் கடன் மட்டும் வாங்கவே வாங்காதீர்கள். நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கென  மிகத்துல்லியமாய் கணக்கிட்டு,  செலவுகளையெல்லாம்...  வருவாய்க்குள்ளேயே அடக்கிக்கொள்ளவேண்டும். மரணம்வரை 'மன நிம்மதி' நிரந்தரமாய் நிற்கும்...  கடனில்லா மனிதரிடம்! உடலாரோக்கியமும் கூடவே  பயணிக்கும்...  இலவச இணைப்பாய்! தெளிவான அன்புடன், வீண் செலவு வேண்டாமே  ‘நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே....' என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம்.  இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப...

Turn Your Weaknesses Into Strengths

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள ், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் “குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ! முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. ...

Ever tried. Ever failed. No matter. Try Again.

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான். ஒரே ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருந்தது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம், "இந்த யானைகள் இதை அறுத்து கொண்டு போகாதா..!?" என்று கேட்டான். அவன் சிரித்தபடி, "இந்த யானைகள் குட்டியாக இருக்கும்போது இதில்தான் கட்டிவைத்தோம். அப்போது அது எவ்வளவோ இழுத்து பார்த்தும், இந்த சங்கிலியை அறுக்க முடியவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் இதை அறுக்க முடியாது என்கிற எண்ணமும் சேர்ந்தே வளர்ந்தது. இப்போது அந்த எண்ணம் மனதில் பதிந்து, அறுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டது. அறுக்க முயற்சிப்பதேயில்லை.." என்று சொன்னான். அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த சங்கிலியை அறுத்து கொண்டு போகலாம். ஆனால் அவைகள் அதற்கான முயற்சியை செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் "முன்பு சில முறை தோற்றதனால், மீண்டும் முயற்சிக்காமலேயே ...