Posts

Ever tried. Ever failed. No matter. Try Again.

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான். ஒரே ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருந்தது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம், "இந்த யானைகள் இதை அறுத்து கொண்டு போகாதா..!?" என்று கேட்டான். அவன் சிரித்தபடி, "இந்த யானைகள் குட்டியாக இருக்கும்போது இதில்தான் கட்டிவைத்தோம். அப்போது அது எவ்வளவோ இழுத்து பார்த்தும், இந்த சங்கிலியை அறுக்க முடியவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் இதை அறுக்க முடியாது என்கிற எண்ணமும் சேர்ந்தே வளர்ந்தது. இப்போது அந்த எண்ணம் மனதில் பதிந்து, அறுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டது. அறுக்க முயற்சிப்பதேயில்லை.." என்று சொன்னான். அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த சங்கிலியை அறுத்து கொண்டு போகலாம். ஆனால் அவைகள் அதற்கான முயற்சியை செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் "முன்பு சில முறை தோற்றதனால், மீண்டும் முயற்சிக்காமலேயே ...

What is true beauty?

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது. "அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற? நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார். அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்...

வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு 1

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.  அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு " ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.  அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார். " எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர். " 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.  " அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார். அசந்து போனார் இவர்...  " சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.  உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார். பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கே...

Always think positive

ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந் தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை... இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர். வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன... அப்போது, மிகப் பெரிய சப்தம்... திரும்பிப் பார்த்தார்கள். இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர... பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர். குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின. இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் பார்த்து...

Knowledge Management

ஒரு நிகழ்ச்சியில் விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் விவேகானந்தர். அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு விவேகானந்தர் உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டுவிடேன் என்றார். இன்று முதல் நான் உங்களை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்.. இதுதான் அறிவின் முதிர்ச்சி..... ஒருவரது கருத்தை மறுக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு என்பது இது தான்..

Determine your value

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்து டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!). இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக...

The Power of Knowledge - Rajaji

சமயோசித அறிவு வேண்டும் ! இது ஒரு உண்மைச் சம்பவம் !! ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது. பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டுக் கத்தினார். இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த சகப் பயணிகள் அனைவரும் பதற்றத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியே கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர் எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, கைக்கடிகாரத்தைத் தவற விட்டவருக...