பெரிய பணக்காரர்களால் கூட காசு கொடுத்து வாங்க முடியாதது என்ன/எது?
இளமை. உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லர் தினமும் காலையில் காலாற நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அப்போது, ஒரு இளைஞன் விரக்தியுடன் நடப்பதை கவனித்தார். என்னவென்று விசாரித்தபோது, அவனுக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள். அவன் தற்கொலை செய்துக்கொள்வதற்காக செல்வதாக கூறினான். அவர் அவனை பல்வேறு விதங்களில் தேற்ற முயற்சித்தார். அவன் கூறினான். "உங்களுக்கென்ன, நீங்கள் உலகின் பணக்காரர். உங்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும். உங்களுடைய எல்லா சொத்துக்களையும் எனக்குத் தர முடியுமா ? " என்றான். "தாராளமாக தருகிறேன். ஆனால், அதற்கு பதிலாக, எனக்கு நீ ஒன்று மட்டும் கொடு. உனது இளமை. உன்னுடைய இளமையை எனக்கு நீ தந்துவிட்டால், நான் மறுபடி உழைத்து, இத்தகைய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்." என்றார் ராக்பெல்லர். இளைஞன், தனது பிரச்சனையை சமாளிக்கும் தன்னம்பிக்கையை அடைந்து, உழைத்து வாழ்வதென்று முடிவெடுத்தான். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும், கடந்த இளமையை மறுபடி பெற இயலாது. வாழ்க்கையில் மறுபடி இளமை திரும்பி வராது. அந்தந்த காலகட்டங்களை அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது.