டிஸ்னியின் இந்த அசத்தல் அனிமேஷன் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
அது என்னவென்று புரியவில்லை இந்த செல்ஃபி யுகத்திலும் கார்ட்டூன்கள், அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு பிரியம். ஃப்ரோஸன், மினியன்ஸ், ஜூடொபியா, பைண்டிங் நீமோ போன்ற அனிமேஷன் படங்களை பார்த்துவளர்ந்த இன்றைய சுட்டிஸ் தவறவிட்டிருக்க வாய்ப்புள்ள டிஸ்னியின் சில பழைய கிளாசிக் அனிமேஷன் படங்களின் லிஸ்ட் இதோ. ஸ்நோ வொய்ட் அண்ட் தி செவன் டுவார்ஃப்ஸ் (1937) இன்றும் மிகவும் பிரபலமான கார்ட்டூன் கேரக்டர்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் கேரக்டர் ஸ்நோ வொய்ட். ஸ்நோ வொய்ட்டை வளர்க்கும் மோசமான மாற்றாந்தாய் ராணி, ஸ்நோ வொய்ட் தனது அழகை மிஞ்சிவிடுவளோ என எண்ணி அடிமையாக வைத்திருக்கிறாள். ஒரு நாள் அவளது மாயக்கண்ணாடி, ‘ஸ்நோ வொய்ட் தான் இந்த ராஜ்ஜியத்தின் மிக அழகிய பெண்’ என ராணியிடம் கூறுகிறது. அதனால் ஸ்நோ வொய்ட்டைக் கொல்ல உத்தரவிடுவாள். அங்கிருந்து தப்பி காட்டில் உள்ள ஏழு குள்ள மனிதர்களின் அடைகலத்தில் வாழும் ஸ்நோ வொய்ட் எப்படி ராணியின் சூழ்ச்சிகளை வென்றாள் என்பதே இப்படத்தின் கதை. இது தான் டிஸ்னியின் முதல் முழுநீள அனிமேஷன் திரைப...