கஜினி 17 முறை தோற்று 18வது முறை வென்றவர். எடிசன் 1000 முறை தோற்றவர் , இந்த உலகில் ஆஸ்கார், நோபல் இரண்டு விருதையும் வாங்கிய, மிக சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவின் படைப்புகள் தொடர்ந்து 9 வருடங்கள், அனைத்து பிரபல பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதே பத்திரிகைகள். அவர் கேட்கும் பணத்தை கொடுக்க தயாராக இருந்தனர். நம்மில் பலரோ, சின்ன, சின்ன தோல்விகளுக்கே நாம் அலுத்து கொள்கிறோம், சலித்து கொள்கிறோம், வெறுத்து கொள்கிறோம்... இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கு.. இது அனைத்து முட்டாள்களும் சொல்லும் வசனம். எடிசன், லிங்கன், பெர்னாட்ஷா ரேஞ்ச்க்கு கூட யோசிக்க வேண்டாம். ஒரு எறும்பு, தேனி, சிலந்தி போன்ற சின்ன, சின்ன உயிரினங்களுக்கு உள்ள விடா முயற்சி, சுறு, சுறுப்பு கூட பல மனிதர்களுக்கு இல்லையே. முடியும் வரை செய்வது முயற்சி அல்ல. மூச்சு உள்ளவரை செய்வதே முயற்சி. விடாது முயலுங்கள், வெற்றி நமதே !!! காலம் இன்னும் இருக்கின்றன நண்பா காலத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை நம் கையில் தான் உள்ளது...