Posts

Showing posts from 2014

யார் புத்திசாலி...

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். 4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது. எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார். உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்...

The Big Idea : Story

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பதினைந்து வயது சிறுவன் முன்வந்து, தான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், படகு தண்ணீரில் சிறிது அமிழ்ந்தது. அப்போது அவன், படகில் தண்ணீர் மட்டத்தைப் அடையாள்ம் செய்தான். பின்பு, யானையைப் படகிலிருந்து இறக்கியபின், பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த அடையாளத்தின் அளவுக்குப் படகு தண்ணீரில் அமிழும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எ...

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று. ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார். “மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”. “ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது. நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.

Self-help is the great strength

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். பின் அவர்களிடம், "அதே போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார். நீதி:தன்னம்பிக்கை மி...

தன்னம்பிக்கை

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. ந...

வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்.. “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்... வெற்றியாளர் சொன்னார்..இல்லை நண்பரே... நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை. மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்...!! எனவே இன்முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்... வெற்றிகள் உங்களுக்கு தொட்டுவிடும் தூரம்தான்...!!!!

When you doubt your power, you give power to your doubt.

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார். மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது. புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள். முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன...

அன்பு இருக்கும் இடம் சொர்க்கம்

ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்கு உணவருந்த வர வில்லை என்று அந்த பெரியவர் சொன்னார்.அவர் பெயர் ’வெற்றி’ ,இவர் ’செல்வம்’ நான் ’அன்பு’. எங்கள் மூவரில் ஒருவர் தான் உங்கள் வீட்டிற்கு வர முடியும்.யார் வர வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தாருடன் கேட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் என்றார். அந்த அம்மாவும் கணவரிடம் சென்று நடந்த விவரத்தை சொன்னார்.அவள் கணவர் ’செல்வத்தை’ கூப்பிடுவோம் அப்போதுதான் நமது வீடு முழுவதும் ’செல்வம்’ கொட்டி கிடக்கும் என்றார்.நாம் சந்தோஷமாக செலவு செய்யலாம் என்றார். மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு ’வெற்றியை’ கூப்பிடுவோம் என்றாள்.இதை எல்லாம் கவணித்து கொண்டு இருந்த அவர்கள் மகள் இல்லையம்மா ’அன்பை’ கூப்பிடுவோம் என்றாள்.அப்போதுதான் நமது இல்லம் நமது மனம் முழுவதும் ’அன்பால்’ நிறைந்திருக்கும் என்றாள். மூவரும் இதற்கு சம்மதிக்கவே அந்த அம்மா வெளியே சென்று எங்கள் வீட்டிற்கு ’அன்பு’ வரவேண்டும் என்ற...

ஆணவம் கொள்ளக்கூடாது

ஒரு துறவி பல சித்திகளைப் பெற்றிருந்தார். அதைக் கொண்டு பல அதிசயங்களை நிகழ்த்துவார். மக்களும், சக துறவிகளும் அவரைப் பாராட்டுவார்கள். இதனால், அவருக்கு தலைக்கனம் அதிகரித்தது. துறவியின் தலைக்கனம் அவர் முக்தி அடைவதற்கு தடையாக இருந்தது. ஒரு நல்ல துறவி முக்தியடைய ஆணவம் தடையாக இருக்கிறதே என்பதை அறிந்த கடவுள், ஒரு முனிவரின் வடிவத்தில் துறவி முன் வந்தார். முனிவர் துறவியிடம்,""அன்பரே! தாங்கள் சித்திகளைப் பெற்று அதிசயங்கள் நிகழ்த்தி வருவதாக அறிந்து மகிழ்ந்தேன். தங்கள் அதிசய செயல்கள் சிலவற்றைக் காணலாம் என நினைக்கிறேன்,'' என்றார்.br> துறவியும் பெருமையுடன் சம்மதிக்கவே, ""அதோ! அந்த யானையை உங்களால் கொல்ல முடியுமா?'' என்றார். துறவி, ஒரு சிறிது மணலை எடுத்து யானை மீது எறிந்தார். யானை இறந்து விட்டது. ""ஆஹா'' என பாராட்டிய முனிவர், ""அந்தயானையை பிழைக்க வைக்க முடியுமா?'' என்றார். துறவியும் தன் கலசநீரை அதன் மீது வீசி எறிய யானை எழுந்து சென்றது. ""சரி...துறவியே! யானையைக் கொன்றீர்கள், பிழைக்க வைத்தீர்கள். .இதனால் உ...

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க. அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு. போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம். - திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்..!!!!!

புத்தியில்லாத செயல்

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. ”அது ஒண்ணும் பெரிய பிரச்சினயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க” என்று யோசனை சொன்னான். வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ”என்னாச்சு?” என்றான் தோட்டக்காரன். ”வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்” என்றன குரங்குகள். புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்...!!!!!!!!

பீர்பாலும் அக்பரும்

டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான தண்டனை வழங்கினார். பணியாளன் தானே கடைக்குப் போய் கால் படி சுண்ணாம்பு வாங்கி, அதை நீரில் கரைத்து முழுவதையும் அவன் குடிக்க வேண்டும் என்பதே அவனுக்கிடப்பட்ட ஆணை. மன்னரின் உத்தரவை மறுக்க வழியின்றி கண் கலங்கி, நொந்து போய் கடைக்குச் சென்று சுண்ணாம்பு வாங்கிக் கொண்டிருந்த பணியாளை அவ்வழியாக வந்த பீர்பால் கண்டார். அவனுடைய வருத்தமுற்ற முகத்தைக் கண்ட பீர்பால் அதற்கான காரணத்தை விசாரித்தார். அவனும் விபரம் கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி அவனைத் தேற்றிய பீர்பால், மன்னரின் தண்டனை மிகக் கொடுமையான...

Secret to happiness

If wealth was the secret to happiness, then the rich would be dancing on the streets, but only poor kids do that. If power ensured security, then officials and politicians would walk unguarded, but those who live simply are the ones who have the soundest sleep. If beauty and fame brought ideal relationships, then celebrities would have the best marriages. Live simply, walk humbly, love genuinely and life will become easy & meaningful.

உதவிகளின் அற்புதங்கள்

உண்மை நிகழ்வு. 1892 ஆம் வருடம் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஒரு அனாதை மாணவன் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்.தன் நண்பன் ஒருவனுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கல்லூரிக்கு பணம் கட்டலாம் என முடிவெடுத்தான். J. Paderewski என்னும் பியானோ கலைஞரை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று அவர் மேனேஜரை சந்தித்தனர்.அவர் 2000 டாலர்கள் கொடுத்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றார்.இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டனர். இசை நிகழ்ச்சி நடத்தும் நாள் வந்து விட்டது,ஆனால் இவர்களால் 1600 டாலர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்க முடிந்தது. Paderewski யிடம் வசூல் பண்ண 1600 டாலர் பணத்தை கொடுத்து விட்டு மீதி 400 டாலருக்கு செக் கொடுத்தனர்.அடுத்த வாரம் இந்த செக் மூலம் பணம் எடுத்து கொள்ளுங்கள் அதற்குள் நாங்கள் வங்கியில் பணத்தை செலுத்தி விடுகிறோம் என்றனர். Paderewski இதை நான் ஒத்து கொள்ள முடியாது என்று கூறி செக்கை கிழித்து எறிந்தார்.1600 டாலர் பணத்தையும் அவர்களிடமே திருப்பி குடுத்து விட்டு உங்கள் கல்லூரி கட்டணத்தை இதை வைத்து கட்டுங்கள் என்றார்.இலவசமாகவே அவர்...

சிகரம் தொடு

நம் நாட்டில்லிருந்துவெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்.... "சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு. "அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார். "இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?" "ஒருவரிடம் மட்டும்…" "என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?" "$1012347.64" "ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?" "முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,கொஞ்சம் பெரிய தூண்டில்,அதைவிடப் பெரிய தூண்டில்,ஃபிஷிங் ராட்,ஃபி...

சூழ்நிலை

ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..! வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..! அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..! பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."? சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க.. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..! பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.. வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..! சர்வர்.. சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..! பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..! சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..! பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..! சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு ...

நம்பிக்கை

பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழ...

செந்தூரம்

இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.

வெற்றியோ தோல்வியோ

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., ஒருவனுக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் அவன் கவலை கொள்ளவில்லை .. அமைதியாக அவர்களை பார்த்து சொன்னான் ..  வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால் தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...  வெற்றியோ தோல்வியோ என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..  அந்த வெற்றியே எனக்கு போதுமென்றான் ..!!

சங்கரநாராயணன்!

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, கோவிலுக்கு சென்று, கோமதியம்மன், சங்கரலிங்க சுவாமியுடன் பள்ளியறை ஊஞ்சலில் ஒன்று சேர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு உருகி, கண்ணீர் மல்க வழிபட்டு வருவார் திருநாவுக்கரசு. 'பள்ளியறை தீப ஆராதனைய பாத்துட்டா போதும்... பிறவிப் பயனயே அடைஞ்சுரலாம். இத விட, வாழ்க்கையில நமக்கு வேற என்ன வேணும்...' என்று, கோவிலிலிருந்து வெளி வரும்போது, தன் நண்பர்களிடம் அவர் சிலாகிப்பது உண்டு. ஆனால், வீடு வந்து சேர்ந்ததும், தன் தங்கை கோமதியை முதலில் பார்ப்பதை, மிகக் கவனமாய் தவிர்த்து வந்தார் திருநாவுக்கரசு. தப்பித் தவறி பார்க்க நேரிட்டு விட்டால், அன்று முழுவதும், அவர் முகம்,'கடுகடு'வென, இருக்கும். அவருடைய இந்த, 'கடுகடு'ப்பிற்கு காரணம், கோமதி ஒரு கைம்பெண். அண்ணனின் கண்களுக்கு கூட, அவள் ஒரு அபசகுணமாகவே தெரிந்தாள். தங்கை கோமதிக்கு, நல்ல சீர் வரிசையோடு தான், கல்யாணம் செய்து வைத்தார் திருநாவுக்கரசு. மாப்பிள்ளை ஏற்கனவே, குடியை முதல் தாரமாய் மணந்ததினால், குடித்துக் கும்மாளமிட்டு, கொண்டவளின் கழுத்தில் தாலிக் கயிறை மட்டுமே விட்டு வைத்து, மின்னியதை எல்லாம் கழட்டி வி...

தயங்காதே... தளராதே...!

நன்றாக படிக்கக் கூடிய எட்டாம் வகுப்பு மாணவன் அவன்; ஆனால், குடும்பத்திலோ வறுமை. தினம், 10 கி.மீ., நடந்து போய் தான், படிக்க வேண்டும். சில சமயம் சைக்கிளிலும், எப்போதாவது பஸ்சிலும் செல்வான். அப்போது, பஸ் கட்டணம் கால் ரூபாய் தான் என்றாலும், அதையும் கணக்கு பார்க்க வேண்டிய குடும்ப சூழல். பிராமணர் என்பதால், ஊக்கத்தொகைக்கும், உதவி தொகைக்கும் வழியில்லை; விடுதியில் தங்குவதற்கோ விதி இடம் தரவில்லை. இதனால், பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்ற அவன், 'சார்... தினமும் 10 கி.மீ., நடந்து, பள்ளிக்கு வந்து போவது சிரமமாயிருக்கிறது; பஸ்சை எதிர்பார்த்தா, அம்மா பட்டினி கிடக்க வேண்டி வரும். இலவசமாய் விடுதியில் இடம் கிடைக்குமானால், எங்கள் குடும்பமே உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர்...' என்று, கெஞ்சினான். அவனது நிலையை அறிந்த ஆசிரியர், 'உனக்கு உதவணும்ன்னு எனக்கும் விருப்பம்தாம்பா...ஆனா, நான் சிபாரிசு செய்யணும்ன்னா, நீ வகுப்புல முதல் மாணவனாக வரணும்; நல்லா படிச்சு, மார்க் எடு பாக்கலாம்...' என்றார். அவனும் சந்தோஷத்துடன், 'எல்லா பாடத்திலயும் நிச்சயமாய் முதலாவதாக வருவேன்...' என்று கூறிச் சென்றா...

துஷ்டனைக் கண்டால்...

"இப்ப எனக்கு, 10 ஆயிரம் ரூபா தருவியா, மாட்டியா?'' உறுமலாக வந்தது ரமேஷின் குரல். ''எதுக்குன்னு சொல்லிட்டு வாங்கிக்கங்க.'' உமாவின் குரலும் உயர்ந்தது. ''என்னடி... சம்பாதிக்கிற திமிரா... நான் நினைச்சா ஒரு நாளைக்கே, 10 ஆயிரம் ரூபா சம்பாதிப்பேன் தெரியுமா?" ஏதோ சொல்ல வாயெடுத்த உமாவின் கண்களில், ராஷ்மி தென்பட்டாள். கலக்கத்துடன் தன் பெற்றோரை பார்த்துக் கொண்டிருந்த, அந்த பதினோரு வயது சிறுமியை கண்டவுடன், 'டக்'கென்று, வாயை மூடி, உள் அறைக்குச் சென்று, பீரோவிலிருந்து, 10 ஆயிரத்தை எடுத்து வந்து கொடுத்தாள். ''அவ்வளவு பயமிருக்கட்டும்,'' என்று கூறியபடியே, உமாவின் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாயை பிடுங்கி, பாக்கெட்டில் திணித்தபடி, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை உதைத்து பறந்தான் ரமேஷ். ''ராஷ்மி கண்ணா... லஞ்சுக்கு, உனக்கு பிடிச்ச புதினா சாதமும், உருளைக் கிழங்கு வறுவலும் பாக்ஸ்ல வச்சுருக்கேன்; எடுத்துகிட்டு கிளம்புடா,'' என முடிப்பதற்குள், பள்ளி வாகனத்தின், 'ஹாரன்' சத்தம் கேட்டது. கிளம்பிய ராஷ்மியுடன் வாசல் வரை கூடவே ...