அன்பு இருக்கும் இடம் சொர்க்கம்
ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள்.
நாங்கள் உங்கள் வீட்டிற்கு உணவருந்த வர வில்லை என்று அந்த பெரியவர் சொன்னார்.அவர் பெயர் ’வெற்றி’ ,இவர் ’செல்வம்’ நான் ’அன்பு’. எங்கள் மூவரில் ஒருவர் தான் உங்கள் வீட்டிற்கு வர முடியும்.யார் வர வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தாருடன் கேட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் என்றார்.
அந்த அம்மாவும் கணவரிடம் சென்று நடந்த விவரத்தை சொன்னார்.அவள் கணவர் ’செல்வத்தை’ கூப்பிடுவோம் அப்போதுதான் நமது வீடு முழுவதும் ’செல்வம்’ கொட்டி கிடக்கும் என்றார்.நாம் சந்தோஷமாக செலவு செய்யலாம் என்றார்.
மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு ’வெற்றியை’ கூப்பிடுவோம் என்றாள்.இதை எல்லாம் கவணித்து கொண்டு இருந்த அவர்கள் மகள் இல்லையம்மா ’அன்பை’ கூப்பிடுவோம் என்றாள்.அப்போதுதான் நமது இல்லம் நமது மனம் முழுவதும் ’அன்பால்’ நிறைந்திருக்கும் என்றாள்.
மூவரும் இதற்கு சம்மதிக்கவே அந்த அம்மா வெளியே சென்று எங்கள் வீட்டிற்கு ’அன்பு’ வரவேண்டும் என்றாள்.
’அன்பு’ வீட்டிற்குள் நுழைந்தார்,பின்னாடியே ’வெற்றியும்’, ’செல்வமும்’ சென்றனர்.
ஒருவர் தானே வருவீர்கள் என்று சொன்னீர்கள் என்று அந்த அம்மா கேட்டார்.
நீங்கள் ’வெற்றி’ கேட்டு இருந்தால் அவர் மட்டும் வந்து இருப்பார்.
நீங்கள் ’செல்வம்’ கேட்டு இருந்தால் நான் மட்டும் வந்து இருப்பேன்.
ஆனால் நீங்கள் ’அன்பு’ வேண்டும் என்று கேட்டதால் நாங்களும் வந்துவிட்டோம்.’அன்பு’ எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் நாங்களும் இருப்போம் என்று பெரியவர் சொன்னார்.
நண்பர்களே அன்பாக இருங்கள்,”அன்பு இருக்கும் இடம் சொர்க்கம்’’....!!!!!!!!!!

Comments
Post a Comment