Posts

The Big Idea : Story

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பதினைந்து வயது சிறுவன் முன்வந்து, தான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், படகு தண்ணீரில் சிறிது அமிழ்ந்தது. அப்போது அவன், படகில் தண்ணீர் மட்டத்தைப் அடையாள்ம் செய்தான். பின்பு, யானையைப் படகிலிருந்து இறக்கியபின், பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த அடையாளத்தின் அளவுக்குப் படகு தண்ணீரில் அமிழும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எ

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று. ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார். “மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”. “ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது. நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.

Self-help is the great strength

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். பின் அவர்களிடம், "அதே போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார். நீதி:தன்னம்பிக்கை மி

தன்னம்பிக்கை

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. ந

வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்.. “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்... வெற்றியாளர் சொன்னார்..இல்லை நண்பரே... நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை. மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்...!! எனவே இன்முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்... வெற்றிகள் உங்களுக்கு தொட்டுவிடும் தூரம்தான்...!!!!

When you doubt your power, you give power to your doubt.

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார். மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது. புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள். முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன

அன்பு இருக்கும் இடம் சொர்க்கம்

ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்கு உணவருந்த வர வில்லை என்று அந்த பெரியவர் சொன்னார்.அவர் பெயர் ’வெற்றி’ ,இவர் ’செல்வம்’ நான் ’அன்பு’. எங்கள் மூவரில் ஒருவர் தான் உங்கள் வீட்டிற்கு வர முடியும்.யார் வர வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தாருடன் கேட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் என்றார். அந்த அம்மாவும் கணவரிடம் சென்று நடந்த விவரத்தை சொன்னார்.அவள் கணவர் ’செல்வத்தை’ கூப்பிடுவோம் அப்போதுதான் நமது வீடு முழுவதும் ’செல்வம்’ கொட்டி கிடக்கும் என்றார்.நாம் சந்தோஷமாக செலவு செய்யலாம் என்றார். மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு ’வெற்றியை’ கூப்பிடுவோம் என்றாள்.இதை எல்லாம் கவணித்து கொண்டு இருந்த அவர்கள் மகள் இல்லையம்மா ’அன்பை’ கூப்பிடுவோம் என்றாள்.அப்போதுதான் நமது இல்லம் நமது மனம் முழுவதும் ’அன்பால்’ நிறைந்திருக்கும் என்றாள். மூவரும் இதற்கு சம்மதிக்கவே அந்த அம்மா வெளியே சென்று எங்கள் வீட்டிற்கு ’அன்பு’ வரவேண்டும் என்ற