Posts

Always think positive

ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந் தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை... இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர். வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன... அப்போது, மிகப் பெரிய சப்தம்... திரும்பிப் பார்த்தார்கள். இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர... பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர். குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின. இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் பார்த்து...

Knowledge Management

ஒரு நிகழ்ச்சியில் விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் விவேகானந்தர். அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு விவேகானந்தர் உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டுவிடேன் என்றார். இன்று முதல் நான் உங்களை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்.. இதுதான் அறிவின் முதிர்ச்சி..... ஒருவரது கருத்தை மறுக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு என்பது இது தான்..

Determine your value

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்து டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!). இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக...

The Power of Knowledge - Rajaji

சமயோசித அறிவு வேண்டும் ! இது ஒரு உண்மைச் சம்பவம் !! ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது. பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டுக் கத்தினார். இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த சகப் பயணிகள் அனைவரும் பதற்றத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியே கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர் எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, கைக்கடிகாரத்தைத் தவற விட்டவருக...

மார்கழி திருவாதிரை

மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே... எதற்காக தெரியுமா? சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். பெரிய பணக்காரன்; அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், ஒரு நாடகத்திற்குச் சென்றான். அதில் நடித்த நடிகையின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்டு, அவளது வீட்டிலேயே தங்கி விட்டான். அந்த நடிகை, சாதுவனின் பணத்தைப் பறித்த பிறகு, அவனை விட்டு சென்றுவிட்டாள். மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான், தனக்கு இந்தக் கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன், வீட்டிற்குப் போகவில்லை. இழந்த பொருளை சம்பாதிக்க திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம் பட்டினம் வந்தனர். அவர் களுடன், வியாபார நுணுக்கங்கள் குறித்து சாதுவன் பேசவே, அவனை அவர்களுக்குப் பிடித்து விட்டது. சாதுவனை தங்களுடன் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர். கப்பல் சென்று கொண்டிருந்த போது, பயங்கரப் புயல் அடித்து கப்பல் கவிழ்ந்தது. உடன் வந்தோரில் பலர், கடலில் மூழ்கி இறந்தனர். உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்ட ச...

யார் புத்திசாலி...

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். 4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது. எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார். உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்...

The Big Idea : Story

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பதினைந்து வயது சிறுவன் முன்வந்து, தான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், படகு தண்ணீரில் சிறிது அமிழ்ந்தது. அப்போது அவன், படகில் தண்ணீர் மட்டத்தைப் அடையாள்ம் செய்தான். பின்பு, யானையைப் படகிலிருந்து இறக்கியபின், பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த அடையாளத்தின் அளவுக்குப் படகு தண்ணீரில் அமிழும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எ...