"ஹராம்......!
"ஹராம்......! பதினோறாம் நூற்றாண்டுலே ஒரு புகழ்பெற்ற இறை நேசச் செல்வர் வாழ்ந்து வந்தார். அவர் பேரு அப்துல்லா ஹிஸ் ஸவ்மயி. (ரஹ்) இப்போது சோவியத் ரஷ்யாவுலே உள்ள 'ஜீலான்'ங்கற நகரத்தோட புறநகர்ப் பகுதியிலே 'நீப்'புன்னு ஒரு ஊர். அங்கேதான் அவர் இருந்தார். அவருக்கு ஒரு ஆப்பிள் தோட்டம் இருந்துது. தஜ்லா நதி ஓரத்துலே! அந்தத் தோட்டத்துலே அவரு ஒருநாள் உலாவிக்கிட்டிருந்தார். அந்த சமயத்துலே இருபது வயசுள்ள அழகான இளைஞர் ஒருத்தர் அவரு முன்னாடி வந்து நின்னார். "என்னை நீங்க மன்னிக்கணும்"ன்னார். இவருக்கு ஒண்ணும் புரியலே! "யாரப்பா நீ? "நீ என்ன கெடுதல் பண்ணினே? நான் எதுக்காக உன்னை மன்னிக்கணும்?" -ன்னு கேட்டார். "ஐயா! என் பேரு அபுசாலிக் மூசா! இங்கேயிருந்து நாலு கல் தொலைவுலே இதே "தஜ்லா" நதி ஓரத்துலே தான் நான் இருக்கேன். நேத்து மத்தியானம் எனக்கு நல்ல பசி... அந்த நேரம் ஒரு ஆப்பிள் பழம் நதியிலே மிதந்து வந்துது... அவசரத்துலே அதை எடுத்து சாப்பிட்டுட்டேன். சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் அப்படி செஞ்சது பெரிய தவறுங்கறதை உணர்ந்தேன். ஒரு பொருளுக்கு உரியவர்கள் யா...