வாய்ப்பு - நீதிக்கதை
நீதிக்கதை ஒரு மரத்தடி. பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் ........ அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள். அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான். ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது. ‘நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்....!' என்றான் அரசன். மகிழ்ந்து போனான் பார்வையற்றவன். ‘அரசே. ! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா.....?' என்று கேட்டான். ‘இதென்ன பிரமாதம். நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன். மதியம் உணவுடன் சந்திக்கிறேன்', என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான். மதிய உணவை அரசன் கொண்டு வருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும்.ஆவலோடு காத்திருந்தான். அடுத்த நாள் வ...