Posts

Showing posts from October, 2014

Self-help is the great strength

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். பின் அவர்களிடம், "அதே போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார். நீதி:தன்னம்பிக்கை மி...

தன்னம்பிக்கை

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. ந...

வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்.. “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்... வெற்றியாளர் சொன்னார்..இல்லை நண்பரே... நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை. மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்...!! எனவே இன்முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்... வெற்றிகள் உங்களுக்கு தொட்டுவிடும் தூரம்தான்...!!!!

When you doubt your power, you give power to your doubt.

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார். மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது. புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள். முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன...

அன்பு இருக்கும் இடம் சொர்க்கம்

ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்கு உணவருந்த வர வில்லை என்று அந்த பெரியவர் சொன்னார்.அவர் பெயர் ’வெற்றி’ ,இவர் ’செல்வம்’ நான் ’அன்பு’. எங்கள் மூவரில் ஒருவர் தான் உங்கள் வீட்டிற்கு வர முடியும்.யார் வர வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தாருடன் கேட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் என்றார். அந்த அம்மாவும் கணவரிடம் சென்று நடந்த விவரத்தை சொன்னார்.அவள் கணவர் ’செல்வத்தை’ கூப்பிடுவோம் அப்போதுதான் நமது வீடு முழுவதும் ’செல்வம்’ கொட்டி கிடக்கும் என்றார்.நாம் சந்தோஷமாக செலவு செய்யலாம் என்றார். மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு ’வெற்றியை’ கூப்பிடுவோம் என்றாள்.இதை எல்லாம் கவணித்து கொண்டு இருந்த அவர்கள் மகள் இல்லையம்மா ’அன்பை’ கூப்பிடுவோம் என்றாள்.அப்போதுதான் நமது இல்லம் நமது மனம் முழுவதும் ’அன்பால்’ நிறைந்திருக்கும் என்றாள். மூவரும் இதற்கு சம்மதிக்கவே அந்த அம்மா வெளியே சென்று எங்கள் வீட்டிற்கு ’அன்பு’ வரவேண்டும் என்ற...

ஆணவம் கொள்ளக்கூடாது

ஒரு துறவி பல சித்திகளைப் பெற்றிருந்தார். அதைக் கொண்டு பல அதிசயங்களை நிகழ்த்துவார். மக்களும், சக துறவிகளும் அவரைப் பாராட்டுவார்கள். இதனால், அவருக்கு தலைக்கனம் அதிகரித்தது. துறவியின் தலைக்கனம் அவர் முக்தி அடைவதற்கு தடையாக இருந்தது. ஒரு நல்ல துறவி முக்தியடைய ஆணவம் தடையாக இருக்கிறதே என்பதை அறிந்த கடவுள், ஒரு முனிவரின் வடிவத்தில் துறவி முன் வந்தார். முனிவர் துறவியிடம்,""அன்பரே! தாங்கள் சித்திகளைப் பெற்று அதிசயங்கள் நிகழ்த்தி வருவதாக அறிந்து மகிழ்ந்தேன். தங்கள் அதிசய செயல்கள் சிலவற்றைக் காணலாம் என நினைக்கிறேன்,'' என்றார்.br> துறவியும் பெருமையுடன் சம்மதிக்கவே, ""அதோ! அந்த யானையை உங்களால் கொல்ல முடியுமா?'' என்றார். துறவி, ஒரு சிறிது மணலை எடுத்து யானை மீது எறிந்தார். யானை இறந்து விட்டது. ""ஆஹா'' என பாராட்டிய முனிவர், ""அந்தயானையை பிழைக்க வைக்க முடியுமா?'' என்றார். துறவியும் தன் கலசநீரை அதன் மீது வீசி எறிய யானை எழுந்து சென்றது. ""சரி...துறவியே! யானையைக் கொன்றீர்கள், பிழைக்க வைத்தீர்கள். .இதனால் உ...

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க. அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு. போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம். - திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்..!!!!!

புத்தியில்லாத செயல்

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. ”அது ஒண்ணும் பெரிய பிரச்சினயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க” என்று யோசனை சொன்னான். வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ”என்னாச்சு?” என்றான் தோட்டக்காரன். ”வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்” என்றன குரங்குகள். புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்...!!!!!!!!

பீர்பாலும் அக்பரும்

டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான தண்டனை வழங்கினார். பணியாளன் தானே கடைக்குப் போய் கால் படி சுண்ணாம்பு வாங்கி, அதை நீரில் கரைத்து முழுவதையும் அவன் குடிக்க வேண்டும் என்பதே அவனுக்கிடப்பட்ட ஆணை. மன்னரின் உத்தரவை மறுக்க வழியின்றி கண் கலங்கி, நொந்து போய் கடைக்குச் சென்று சுண்ணாம்பு வாங்கிக் கொண்டிருந்த பணியாளை அவ்வழியாக வந்த பீர்பால் கண்டார். அவனுடைய வருத்தமுற்ற முகத்தைக் கண்ட பீர்பால் அதற்கான காரணத்தை விசாரித்தார். அவனும் விபரம் கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி அவனைத் தேற்றிய பீர்பால், மன்னரின் தண்டனை மிகக் கொடுமையான...