ஒன்னுமே புரியமாட்டேங்குது...
ஒன்னுமே புரியமாட்டேங்குது... அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க. அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான், பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க. சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க. போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம். இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர், வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க. உப்பையும் சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும். அதனால பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. அதையும் நம்பி யூஸ் பன்னுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி. கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கானு கேக்குறான். டேய் பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதான? அதைவிட கொடுமை ஒண்ணு இருக்கு. நாட்டு சக்கரையை...