கல்வியின் பெயரில் கறார் மாபியா வியாபாரம்!
பெற்றோர்களை மனநோயாளியாக்கி மாணவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் கோழிப்பண்ணை 10 +2 டுட்டோரியல் நிறுவனங்கள் தற்போது அரசியல்வாதிகளுக்கு பணம் சப்ளை செய்யும் புரோக்கர்கள் கல்வியின் பெயரில் கறார் மாபியா வியாபாரம்! எப்போது திருந்துவார்கள் இந்த ஆட்டு மந்தை பெற்றோர்கள் இது மாணவர்களைக் குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்த அளவு தனியார் பெருமுதலாளிகளின் கல்வி வியாபாரத்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது... பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே! இத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து ப்ளஸ் டூ / பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முதலில் வாழ்த்துகள்... ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை - வேலூர் மாவட்டங்கள்தான்... தென் தமிழகத்தில் எப்போதும்போல திருநெல்வேலி! வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்! ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ்...