Marketing tricks - வியாபார தந்திரம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgk8_fR5_vwdEIMrGGsN0goQM2R97i5PI1hGRuGC4Y0V-GEtGTBFAPC1VuDN5NzlZZqWpQi6NGvzYMfX4LMNC47XpnuSkwSAXuhtSg8_LbEjr9sceALNDeHfIaqZN2UhaX4inxdmssCsEvS/s1600/banana.jpg)
தந்திரம் 1: பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் ஒரு முதியவர் அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். இவர் ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழங்களை வாங்க முன்வரவில்லை. இந்த முதியோர் பலக்கூடையயை சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், மீண்டும் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை. மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார். அங்கும் பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான். மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ‘ஆறு பழம் பத்து ரூபாய்’ என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்குப் பழங்களை வாங்கி,...