கடன் வாங்கிக் குவித்த இளைஞர்கள்... கச்சிதமாக சேமிக்கும் வழிகள்!
இக்கட்டுரையின் வார்த்தைகளை வாழ்நாள் முழுதுமே முறையாகப் பின்பற்றுவதால் ஒருவர் பெறக்கூடிய முழு பலன்... சொல்லிற்கடங்காது. அனுபவப்பூர்வமான இக்கட்டுரையில் விட்டுப்போயிருக்கும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' உண்மைதான்! இதை அடைவது எப்படி? கடனற்ற வாழ்வே நிரந்தர இன்பம். காரணம் எதுவாயினும், யாரிடமிருந்தும் எப்போதும் கடன் மட்டும் வாங்கவே வாங்காதீர்கள். நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கென மிகத்துல்லியமாய் கணக்கிட்டு, செலவுகளையெல்லாம்... வருவாய்க்குள்ளேயே அடக்கிக்கொள்ளவேண்டும். மரணம்வரை 'மன நிம்மதி' நிரந்தரமாய் நிற்கும்... கடனில்லா மனிதரிடம்! உடலாரோக்கியமும் கூடவே பயணிக்கும்... இலவச இணைப்பாய்! தெளிவான அன்புடன், வீண் செலவு வேண்டாமே ‘நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே....' என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப...