Posts

Showing posts from September, 2013

ஏழ்மை

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்... அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்... மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று... ஏழ்மை என்பது ந...