செந்தூரம்

இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை