Posts

காலத்தைக் கொண்டாடுங்கள்

  ஒரு ஊரில் ஒரு தொழிலதிபர் இருந்தார். ஒருநாள் காலையில் அவரது வங்கி மேலாளரிடமிருந்து ஒரு போன் வந்தது. “சார் உங்க கணக்கில யாரோ ஒருவர் 86,400 ரூபாய் டெபாஸிட் போட்டிருக்கிறார். என்ன பண்ணலாம் என்றார். அவர் யார் என்று தெரியுமா?’என்று கேட்டால் தெரியாது’ என்றார் வங்கி மேலாளர். ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? 86,400 ரூபாய். சும்மாவா? தலைகால் புரியவில்லை மனிதருக்கு. இரவு மறுபடியும் தொலைபேசி அலறுகிறது. “சார் அந்த 86,400 ரூபாயை யாரோ எடுத்துட்டாங்க () சார்” என்றார் வங்கி மேலாளர். “அதெப்படி முடியும்” என்று இவர் அலற பெரிய ஆர்ப்பாட்டமே நடந்துவிட்டது. 86,400 டெபாஸிட் செய்தபோது யார் செய்தது என கவலைப்படாதவர் பணம் போனதும் கவலையோடு அலறுகிறார். நாள்தோறும் பெயர் தெரியாத ஒருவர் நம் கணக்கில் 86,400 டெபாஸிட் செய்து இரவே அதை எடுக்கவும் செய்தால் வருத்தம் வராதா? என்ன அந்த 86,400 ரூபாய்…? ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரம். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள். அப்படியானால் 86,400ரூபாய். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்திக் கொள்ள 86,400 விநாடிகளைக் கடவுள் நமக்காக டெ...

makkal tv image

Image
 

விதையிலிருந்து விருட்சம்

Image
 

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Image
  8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு br>பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய...

கல்வியை சமூக அடிப்படையாக செயல்படுத்துவது முட்டாள்தனம்

Image
 இன்றய  உலகில்  ஒவ்வொருவரின்  வெற்றி, அந்தஸ்துக்கு  கல்வியே அளவுகோலாகும். கடந்த 50+ ஆண்டுகளாக இந்தியாவில் அல்லது உலகம் முழுவதும் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திற்குப் பின் - கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது  கல்வி அல்லது கல்வியறிவு இல்லாமல், இந்த சமூகத்தில் வாழ்வது மற்றும் பொருளாதார ரீதியாக கண்ணியமான வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கல்வியறிவு இல்லாத மக்கள், சம்பாதித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்த்து, தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தனர். படிக்காத மனிதன் பழைய நாட்களில் வாழ நிறைய வாய்ப்புகள் இருந்தன. இப்போதெல்லாம் கல்வி இல்லாமல் வாழ முடியாது. நாம் கல்வியால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மோசமான சமூக காலகட்டத்தில் வாழ்கிறோம், மேலும் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேட்டைக்காரர்கள் அங்கீகரிக்கப்பட்ட காலங்கள் இருந்தன, பின்னர் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டனர், பின்னர் வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டனர், பின்னர் கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பங்கள் அங்கீகரிக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர்...

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..

 ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்’ என்று பயந்தார். ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது “இந்த பூக்களைப் பா...

வல்லுனர் டிப்ஸ் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!

 1. வீட்டிலும் வேலையிலும் ஒழுங்கின்மை வீட்டில் எந்தெந்த வேலைகளில் முதலில் முடிப்பது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தெரியாமல் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்வது, வீட்டில் உள்ள அறைகளில் எந்தப் பொருளையும் இருந்த இடத்தில் வைக்காமல் ஏனோ தானோவென கிடாசிவிட்டு, பின்னர் தேவைப்படும் பொருட்களைத் தேட அதிக நேரம் எடுத்துக்கொள்வது எல்லாமே ஒழுங்கின்மையின் கீழ்தான் வரும். அலுவலகத்திலும் அன்றாட வேலைகளை சரியாக திட்டமிடாமல் செய்வதும், பின்னர் குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாமல் திணறுவதும் கூட ‘Disorganized’ என்று சொல்லக் கூடிய ஒழுங்கின்மைதான். இந்தப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்குவதும் நம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான முக்கிய அறிகுறியே. 2. நேரத்தை உண்ணும் விரல்! கையில் மொபைலை வைத்துக் கொண்டு எந்த நேரமும் சமூக வலைதளங்களில் விரல்களால் ஸ்க்ரால் செய்வது வருவது நம்மில் பலரிடமும் நம்மை அறியாமல் புகுந்துவிட்ட அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் போஸ்டுகளை அடிக்கடி பார்ப்பது ஒரு பக்கம் என்றால், கிடைக்கிற சில நிமிட இடைவெளிகளில் ஷார்ட்ஸ...

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

 குறள் எண் – 645 பால் – பொருட்பால் இயல் – அமைச்சியல் அதிகாரம் – சொல்வன்மை சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. மு. வரதராசன் உரை : வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும். சாலமன் பாப்பையா உரை : தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக. கலைஞர் உரை : இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

ஆள் பார்த்து பேசணும்!

 ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார். ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை. ""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ""ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,'' என்றான். ஆபத்தில் கிடந்தவர், ""நன்றியப்பா! விரைந்து வா,'' என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல், ""தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது. "ஆட்களைக் கூட்டி வருகிறேன்' என்பது நிகழ்காலம். "கூட்டி வருவேன்' என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை...

பெரிய பணக்காரர்களால் கூட காசு கொடுத்து வாங்க முடியாதது என்ன/எது?

 இளமை. உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லர் தினமும் காலையில் காலாற நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அப்போது, ஒரு இளைஞன் விரக்தியுடன் நடப்பதை கவனித்தார். என்னவென்று விசாரித்தபோது, அவனுக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள். அவன் தற்கொலை செய்துக்கொள்வதற்காக செல்வதாக கூறினான். அவர் அவனை பல்வேறு விதங்களில் தேற்ற முயற்சித்தார். அவன் கூறினான். "உங்களுக்கென்ன, நீங்கள் உலகின் பணக்காரர். உங்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும். உங்களுடைய எல்லா சொத்துக்களையும் எனக்குத் தர முடியுமா ? " என்றான். "தாராளமாக தருகிறேன். ஆனால், அதற்கு பதிலாக, எனக்கு நீ ஒன்று மட்டும் கொடு. உனது இளமை. உன்னுடைய இளமையை எனக்கு நீ தந்துவிட்டால், நான் மறுபடி உழைத்து, இத்தகைய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்." என்றார் ராக்பெல்லர். இளைஞன், தனது பிரச்சனையை சமாளிக்கும் தன்னம்பிக்கையை அடைந்து, உழைத்து வாழ்வதென்று முடிவெடுத்தான். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும், கடந்த இளமையை மறுபடி பெற இயலாது. வாழ்க்கையில் மறுபடி இளமை திரும்பி வராது. அந்தந்த காலகட்டங்களை அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது.

குழந்தைகளை வளர்ப்பது எப்படி

 ஒரு இளைஞனும் ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆளுக்கொரு செடி வாங்குகிறார்கள்.அந்த இளைஞன் அந்த செடியை நன்றாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறான். தினமும் தண்ணீர் விடுகிறான். இணையதளங்களில் தேடி நல்ல சிறந்த உரங்களை வாங்கி வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான். அந்த ஆசிரியரோ அந்த செடிக்கு தினமும் தண்ணீர் விடுகிறார். மாட்டு சாணத்தை எப்போதோ ஒரு சில நேரம் மட்டும் உரமாக இடுகிறார்.இளைஞன் வளர்த்த செடி நன்றாக செழித்து வளர்ந்து புஸு புஸுவென்றுக் காணப்படுகிறது. ஆசிரியரின் செடி இரண்டு மூன்று கிளைகளுடன் சாதரணமாக உள்ளது. அந்த இளைஞன் அடிக்கடி அந்த ஆசிரியரிடம், "என்ன பெருசு இப்படி இருக்கு உன் செடி.. என்னோடத பாரு. எப்படி புஸு புஸுன்னு இருக்கு. நல்ல உரம் வைக்க மாட்டியா?" என்று கேட்கிறான்.அதற்கு ஆசிரியர் கூறுகிறார், "உள்ளது போதும் ப்பா". திடீரென்று ஒருநாள் கஜா புயல் போன்றதொரு கடுமையான புயல் வீசுகிறது. மறுநாள் இளைஞனின் செடி வேருடன் வீழ்ந்து கிடக்க ஆசிரியரின் செடி நன்றாக நிற்கிறது. ஆசிரியரிடம் செல்கிறான் இளைஞன். "நான் நல்ல உரமெல்லாம் வச்சு என் செடிய நல்லா பாத்துக்கிட்டேன். ஆனாலும் என்...

கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?

 அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத்தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை. அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச்சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப்போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய்ச்சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ண...

இரண்டு வகையான ஆசிரியர்கள்

1. சிலர் நடைமுறை அறிவை வழங்குகிறார்கள். 2. இன்னும் சிலர் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை வழங்குகிறார்கள் சுருக்கம் பணியிடத்தில், இளைஞர்கள் தங்கள் விஸ்வாமித்திரர்களை சந்திக்கிறார்கள், வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்கள், பணியிடத்தில் சிறப்பாக செயல்பட , நடைமுறை அறிவை வழங்கி நம் முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள். ராமாயணத்தில், ராமருக்கு வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரா என்ற இரு ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த இரண்டு ஆசிரியர்களும் இரவும் பகலும் போல ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். வசிஷ்டர் முதல் ஏழு முனிவர்களில் ஒருவர். அவர் வேத ஞானத்துடன் தொடர்புடையவர். ராமர் தனது படிப்பை முடித்த பிறகு, அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து,  உலகின் மாயையான தன்மையால் ஏமாற்றமடைந்து உலக வாழ்க்கையில் ஆர்வமின்றி இருக்கிறார். அச்சமடைந்த அவரது தந்தை தசரதன் வசிஷ்டரை அழைக்கிறார், அவர் இது ஒரு நல்ல விஷயம் என்று அறிவிக்கிறார், ராமர் இப்போது வேதங்களின் இறுதி ஞானத்தைப் பெறத் தயாராகிவிட்டார்.பின்னர், 21 நாட்களுக்கு, ராஜாவின் அரசவையில் யோக வசிஷ்டர் கற்பித்தலின் மூலம், அறிவொளி பெற்ற ராமர் யதார்த்தத்தின் உண்மையான...

தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை

 தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை* I. *உடற்பயிற்சி* என்பது மருத்துவம். ii *விரதம்* இருப்பது மருத்துவம். iii *இயற்கை உணவே* மருந்து. iv. *சிரிப்பு* ஒரு மருந்து. v. *காய்கறிகளே* உண்பது மருந்து. vi. *தூக்கமே* மருந்து. vii. *சூரிய ஒளியே* ‌ ‌மருந்து viii. ஒருவரை *நேசிப்பது* மருத்துவம். ix. *நேசிக்கப்படுவது* மருத்துவம். x. *நன்றியுணர்வு* என்பது மருத்துவம். xi குற்றத்தை *மன்னிப்பது* மருத்துவம். xi *தியானம்* என்பது மருத்துவம். xiii. புத்தகங்களை.... வரலாற்றை.... தத்துவங்களை... படிப்பதும் மருத்துவம். xiv. *பாடுவதும்* *ஆடுவதும்* மருத்துவம். xv *சரியான* நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம். xvi சரியாகச் *சிந்திப்பதும்*, சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம். xvii. *தன்னை நம்புவதும்* மருத்துவம் xviii. *நல்ல நண்பர்கள்* இருப்பதும் மருத்துவம். xix. தன்னை *மன்னிப்பதும்* மற்றவர்களை *மன்னிப்பதும்* மருத்துவம். *இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்*

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!

 # படித்ததில் வலித்தது # முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்! "எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன... அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!" என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார். வழக்கு தொடுத்தவரும், அவரே! ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்! மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்; வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்! அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது... திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்பமின...

குருதேவர் சொன்ன குட்டிக் கதை - நல்லது கேட்டது - ராமகிருஷ்ண பரமஹம்சர்

 குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். “எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான். ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச் சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர். சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர். சீடன் என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறி...

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

 *முதல் மாமனிதர் :* 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவரும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.* இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று...

Healthy list

 ஆரோக்கியதிற்கான வழிகள்  1 நீண்ட நேரம் தூங்குங்கள் 2 உடற்பயிற்சி செய்யுங்கள் 3 அதிக தண்ணீர் குடிக்கவும் 4 சர்க்கரை குறைவாக சாப்பிடுங்கள் 5 எதிர்மறைக்கு பதிலளிக்க வேண்டாம் 6 அதிகமாக எழுதுங்கள்  7 ஒழுங்கீனத்தை அகற்றவும் 8 பொறுமையாக இருங்கள் 9 அதிகமாக கேளுங்கள் 10 சத்தமாக சிரிக்கவும் 11 ஆழமாக சுவாசிக்கவும் 12 அமைதியாக இருங்கள் 13 நேர்மையாக இருங்கள்

முண்டு மிளகாய்... ராமநாதபுரத்தின் தனித்துவ அடையாளம்! புவிசார் குறியீடு வழங்கப்படுமா?

Image
  தமிழ்நாட்டில் விளையக்கூடிய மஞ்சள், மலைப்பூண்டு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாகத் திகழும் முண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என இம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை எழுப்புகிறார்கள். தங்கள் மாவட்டத்தில் மட்டுமே நீண்டகாலமாக அதிகளவில் விளைவிக்கப்படும் முண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்தால், உலக அளவில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். காரம், சுவை, மணம் அதிகம் ராமநாதபுரம் முண்டு மிளகாயின் சிறப்புகள் மற்றும் இதற்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான அவசியம் குறித்து அறிந்து கொள்ள, இம்மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியனை சந்தித்துப் பேசினோம். ‘‘முண்டு மிளகாயில் காரத்தன்மை, சுவை, மணம் அதிகமாக இருக்கும். இது வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிராகும். இம்மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய வட்டங்களில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிராக முண்டு மிளகாய...

ஒரு ஏக்கர்... ரூ.1,35,000... அசத்தல் வருமானம் தரும் 'அழகிவிளை' நாட்டு ரக முருங்கை!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு ஏக்கரில் ‘அழகிவிளை’ என்ற நாட்டு ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். 25.02.2016 தேதியிட்ட இதழில், “15 சென்ட்... 150 நாள்... 70 ஆயிரம் லாபம்” என்ற தலைப்பில் இவரைப் பற்றி ஏற்கெனவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பாகல் சாகுபடி குறித்த தன் அனுபவத்தை அதில் பதிவு செய்திருந்தார். தற்போது இவர் சாகுபடி செய்துள்ள அழகிவிளை நாட்டு ரக முருங்கை அனுபவம் குறித்து அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி கிராமம். இங்குதான் பாலகிருஷ்ணனின் முருங்கை தோட்டம் உள்ளது. நாம் சென்றபோது சுறுசுறுப்பாகக் காய்களைப் பறித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல் ‘‘சாத்தான்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல நல்ல வளமான செம்மண் நிலம் அதிகம். இங்கவுள்ள விவசாயிங்கள்ல பெரும்பாலானவங்க, நீண்ட காலமா முருங்கை சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. இந்த மண் ...